search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சச்சின் தெண்டுல்கர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2007-ல் பிசிசிஐ தனக்கு கேப்டன் பதவியை வழங்க தயாராக இருந்தது.
    • என்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். முகமது அசாருதீனை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்த நிலையில், 1996-ல் இருந்து 1999 வரையிலான காலக்கட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் கேப்டனாக பணியாற்றினார்.

    ஆனால் அவர் கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணியும் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவரது தனிப்பட்ட ஆட்டமும் சரிவை கண்டது. இதனால் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு வீரராக தொடர்ந்து விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

    சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு சவுரவ் கங்குலி கேப்டன் பதவியை ஏற்று, அணியில் பல மாற்றம் செய்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து எதிர்கால அணியை உருவாக்கினார்.

    அப்போதுதான் எம்.எஸ். டோனி இந்திய அணியில் அறிமுகம் ஆனார். குறுகிய வருடத்திற்குள் கேப்டன் பதவியை ஏற்று ஜொலித்தார்.

    எம்.எஸ். டோனியின் தலைமையின் கீழ் சச்சின் தெண்டுல்கர் நீண்ட காலம் விளையாடியுள்ளார். எம்.எஸ். டோனியை கேப்டனாக்க பரிந்துரை செய்தது சச்சின் தெண்டுல்கர்தான் என்பது எல்லோருக்குத் தெரியும். தற்போது அதற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் "2007-ல் பிசிசிஐ கேப்டன் பதவி வாய்ப்பை எனக்கு வழங்கியது. ஆனால், என்னுடைய உடல் அப்போது மிகவும் மோசமாக இருந்தது.

    டோனியுடன் மனநிலை மிகவும் நிலையானது. அமைதியானவர். சரியான முடிவை எடுப்பார் என்ற அவர் மீதான என்னுடைய அவதானிப்பு மிகவும் சிறந்த வகையில் இருந்தது. இதனால் அவரை கேப்டன் பதவிக்கு பரிந்துரை செய்தேன்" இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    • மகாராஷ்டிராவில் உள்ள தடோபா புலிகள் காப்பகத்திற்கு சச்சின் சென்றுள்ளார்.
    • இயற்கை அதிசயத்தை கண்டதில் எனக்கு மிக பெரிய பிரமிப்பு ஏற்பட்டது.

    கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் தெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேசிய சுற்றுலாத்தினத்தை கொண்டாடும் வகையில் சச்சின் வெளியிட்ட அந்த வீடியோவில், மராட்டியத்தில் உள்ள தடோபா புலிகள் காப்பகத்திற்கு சச்சின் சென்றுள்ளார்.

    அங்கு 3 தலைமுறை புலிகள் நடந்து வரும் காட்சியை பார்த்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், இந்த இயற்கை அதிசயத்தை கண்டதில் எனக்கு மிக பெரிய பிரமிப்பு ஏற்பட்டது. தேசிய சுற்றுலாத்தினத்தை ஆரவாரத்துடன் கொண்டாடுகிறோம்! தடோபாவில் நான் 3 தலைமுறை புலிகளை பார்த்தேன். ஜூனோபாய் என்ற புலியின் குட்டி வீரா, வீராவின் குட்டிகள் என அனைவரையும் பார்த்தேன். இந்தியாவில் ஆராய்வதற்கு பல இடங்கள் உள்ளன என்று பதிவிட்டு இருந்தார். அவரது இந்த வீடியோ வைரலாகி வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    • சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்துள்ளார்.
    • ரோகித் சர்மா 31 சதங்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார்.

    இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு முன் இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக சதம் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை சமன் செய்தார்.

    இன்று நடைபெற்று வரும் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கெதிராக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

    • ஒரே உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை.
    • ஒரே உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து சாதனை.

    உலகக் கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.

    இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி 50 ரன்களை கடப்பது இது 8-வது முறையாகும். இதன்மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 2003-ல் 7 முறை அடித்திருந்தது இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி அதை முறியடித்துள்ளார்.

    ஷாகில் அல் ஹசன் 2019-ல் 7 முறையும், ரோகிர் சர்மா மற்றும டேவிட் வார்னர் ஆகியோர் 2019-ல் தலா 6 முறையும் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

    மேலும், 80 ரன்களை தொட்டபோது இந்த தொடரில் 674 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் இதற்கு முன் 2003-ல் 673 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்திருந்தார். தற்போது சச்சின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

    ஹெய்டன் 2007-ல் 659 ரன்களும், ரோகித் சர்மா 2019-ல் 648 ரன்களும், டேவிட் வார்னர் 2019-ல் 647 ரன்களும் எடுத்துள்ளனர்.

    • இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முரளீதரன்
    • மும்பையில் நடைபெற்ற சச்சின் தெண்டுல்கர், முரளீதரன், ஜெயசூர்யா பங்கேற்பு

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அழிக்க முடியாத வரலாற்று சாதனையை படைத்தவர் முத்தையா முரளீதரன். இவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு "800" என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தின் டிரைலரை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய சச்சின் தெண்டுல்கர் ''அவர்களுடன் போதுமான நேரம் செலவழிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பான அம்சம் என்னவென்றால், பல வருடங்களுக்குப் பிறகும் நாங்கள் நல்ல நண்பர்களாகத் தொடர்கிறோம், ஒருவரையொருவர் சகஜமாக ரசிக்கிறோம். நிச்சயம் அனைவரும் படத்தைப் பார்க்கப் போகிறார்கள்.'' என்றார்.

    இந்த விழாவில் இலங்கை அணியின் அதிரடி வீரராக திகழ்ந்த சனத் ஜெயசூர்யாவும் கலந்து கொண்டார்.

    • 50 வயதை தொடவுள்ள சச்சின் தெண்டுல்கரை பாராட்டும் வகையில் அவருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் செய்யும் சிறிய அடையாளமாக சிலை இருக்கும்.
    • ஏப்ரல் 24-ந்தேதிக்குள் முடியவில்லையென்றால் அக்டோபர், நவம்பரில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பையின் போது சிலை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 10 ஆண்டுகள் ஆகிறது.

    இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் தெண்டுல்கரின் முழு உருவசிலை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    தெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை வருகிற ஏப்ரல் 24-ந்தேதி கொண்டாட உள்ளார். அவருக்கு நினைவு பரிசாக இருக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டியின்போது (மார்ச் 31-ந்தேதி முதல் மே 28-ந்தேதி வரை நடக்கிறது) சிலையை திறக்க திட்டமிட்டுள்ளனர்.

    ஏப்ரல் 24-ந்தேதிக்குள் முடியவில்லையென்றால் அக்டோபர், நவம்பரில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பையின் போது சிலை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே கூறும் போது, 50 வயதை தொடவுள்ள சச்சின் தெண்டுல்கரை பாராட்டும் வகையில் அவருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் செய்யும் சிறிய அடையாளமாக இந்த சிலை இருக்கும்.

    இதுகுறித்து அவரிடம் பேசி ஒப்புதல் பெற்றோம் என்றார்.

    இதுகுறித்து தெண்டுல்கர் கூறும்போது, இது எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கை இங்கேதான் தொடங்கியது. நம்ப முடியாத நினைவுகளுடன் கூடிய பயணங்களை நினைக்கும் இடம் இது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த தருணம் என்பது 2011-ம் ஆண்டு இந்த மைதானத்தில் உலக கோப்பையை வென்றதுதான். நான் கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டியும் இந்த மைதானத்தில்தான். இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம் என்றார்.

    ஏற்கனவே வான்கடே மைதானத்தில் தெண்டுல்கர் பெயரில் பெவிலியன் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெண்டுல்கரின் சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    • ஜோரூட் இன்னும் 5 ஆண்டுகள் விளையாடலாம். இதனால் அவரால் தெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க இயலும்.

    மெல்போர்ன்:

    இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஜோரூட் முதல் போட்டியில் சதம் அடித்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி கிடைத்தது. அதோடு ஜோரூட் 10 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை எடுத்த 14-வது வீரர் ஆவார்.

    இந்த நிலையில் டெஸ்டில் அதிக ரன் எடுத்த தெண்டுல்கரின் (15,921) சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜோரூட் மிகவும் பிரமாதமாக ஆடி வருகிறார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஜோரூட் இன்னும் 5 ஆண்டுகள் விளையாடலாம். இதனால் அவரால் தெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க இயலும். உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவரால் 15,000 ரன்னுக்கு மேல் எடுக்க இயலும்.

    இவ்வாறு டெய்லர் கூறியுள்ளார்.

    ‘கிரிக்கெட் கடவுள்’ என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர், தனது 46-வது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். #SachinRameshTendulkar
    ‘கிரிக்கெட் கடவுள்’ என்று அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். 24 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஜாம்பவானாக திகழ்ந்து 100 சர்வதேச சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். அத்துடன் 34357 ரன்கள் குவித்துள்ளார்.



    இவருக்கு இன்று 46-வது பிறந்த நாள். பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறுவதற்காக அவரது வீட்டு முன் திரண்டனர். அப்போது சச்சின் தெண்டுல்கர் வெளியே வந்து ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.



    சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் குமார் சவுத்ரி நினைவுப் பரிசு வழங்கினார்.



    மேலும் சச்சினுக்கு பாலிவுட் பிரபலங்கள், முன்னாள் இன்னாள் வீரர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சிறுவயது பயிற்சியாளரான ராமாகந்த் அச்ரேக்கர் 87-வது வயதில் இன்று காலமானார். #SachinTendulkar
    இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் போன்ற பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.



    இவர் சிறுவனாக இருக்கும்போது ராமாகந்த் அச்ரேக்கர் என்ற பயிற்சியாளரிடம் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். இவரை சச்சின் எந்த நேரத்திலும் குறிப்பிட மறந்ததில்லை. சச்சின் தெண்டுல்கருக்கு பயிற்சியளித்ததற்காக மத்திய அரசின் துரோணாச்சாரியார் விருதையும் பெற்றுள்ளார்.

    87 வயதாகிய ராமாகந்த் அச்ரேக்கர் மும்பையின் இன்று காலமானார்.
    ×